
சென்னை: தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.40 குறைந்து, ரூ.37,600-க்கு விற்பனையானது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் நிலவுகின்றன. இந்நிலையில், தங்கம் விலை நேற்று குறைந்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ரூ.4,700-க்கு விற்பனையானது. பவுனுக்கு ரூ.40 குறைந்து, ரூ.37,600-க்கு விற்பனையானது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.40,816-க்கு விற்பனையானது. இதேபோல, நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.61.50-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.61,500-ஆக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5VynRsq
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக