offer for you

சனி, 12 நவம்பர், 2022

ஒரே நாளில் பவுனுக்கு ரூ.680 அதிகரிப்பு: தங்கம் விலை ரூ.39 ஆயிரத்தை கடந்தது

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.680அதிகரித்து ரூ.39,240-க்கு விற்பனையானது. தங்கத்தின் விலை ரூ.39 ஆயிரத்தை கடந்திருப்பது, நகை வாங்குவோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று அதிகரித்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 அதிகரித்து ரூ.4,905- க்கு விற்பனையானது. பவுனுக்கு ரூ.680அதிகரித்து ரூ.39,240-க்கு விற்கப்பட்டது. இதேபோல, 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.42,456-க்கு விற்பனையானது.

தங்கத்தின் விலை கடந்த 2-ம் தேதி பவுனுக்கு ரூ.37,928 ஆக இருந்தது. பின்னர், படிப்படியாக உயர்ந்து வந்தது. 8-ம் தேதி ஒரு பவுன் தங்கம் விலை ரூ.38,064-ஆகஅதிகரித்தது. பின்னர், 9-ம் தேதி பவுனுக்கு ரூ.456 அதிகரித்து ரூ.38,520-க்கு விற்பனையானது. 10-ம் தேதி பவுனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.38,560-க்கு விற்பனை ஆனது. இந்நிலையில், தங்கத்தின் விலை நேற்று ரூ.39 ஆயிரத்தைகடந்திருப்பது, நகை வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும்தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,312அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு கிராம் வெள்ளி நேற்று ரூ.67.80-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.67,800 ஆக இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/HImafKT
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now