offer for you

வியாழன், 15 டிசம்பர், 2022

தங்கம் விலை பவுனுக்கு ரூ.480 அதிகரிப்பு

சென்னை: விலை பவுனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.40,800-க்கு விற்பனையானது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அதன்படி தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று அதிகரித்தது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 அதிகரித்து ரூ.5,100-க்கும், பவுனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.40,800-க்கும் விற்பனையானது. அதேபோல, 24 காரட் சுத்த தங்கம் 8 கிராம் ரூ.44,016-க்கு விற்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qJwQ102
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now