offer for you

திங்கள், 26 டிசம்பர், 2022

மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 721 புள்ளிகள் உயர்வு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வர்த்தகம் திங்கள்கிழமை ஏற்றத்துடன் நிறைவடைந்து சென்செக்ஸ் 721 புள்ளிகள் (1.20 சதவீதம்) உயர்வடைந்து 60,566 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 207 புள்ளிகள் (1.17 சதவீதம்) உயர்வடைந்து 18,014 ஆக இருந்தது.

திங்கள்கிழமை 300 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை வர்த்தகம், கடந்த வாரத்தின் சரிவில் இருந்து மீண்டு தொடர்ந்து ஏற்றத்தை நோக்கிச் சென்றது. காலை 09:39 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 441.05 புள்ளிகள் உயர்ந்து 60,286.34 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 73.20 புள்ளிகள் உயர்ந்து 17,880.00 ஆக இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/cUGIBRh
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now