offer for you

திங்கள், 16 ஜனவரி, 2023

இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் 1% பேரிடம் நாட்டின் 40%க்கும் அதிகமான சொத்துக்கள் உள்ளன: ஆக்ஸ்ஃபேம்

இந்தியாவின் பெரும் பணக்காரர்களாக இருக்கும் 1 சதவீதம் பேரிடம் நாட்டின் மொத்த சொத்து மதிப்பில் 40 சதவீதம் குவிந்திருப்பதாகவும். அடித்தட்டில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட மக்கள்தொகை வெறும் 3 சதவீதம் சொத்துகளை பகிர்ந்து கொண்டுளதாகவ்வும் ஆக்ஸ்பேம் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆக்ஸ்ஃபேம் இன்டர்நேஷனல் என்ற பொருளாதார உரிமைகள் குழு டேவோஸ் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பொருளாதார கூட்டத்தின் முதல் நாளில் இந்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. பொருளாதாரத்தில் இந்தியாவின் சமுத்துவமின்மை பற்றி இந்த அறிக்கையில் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அந்த அறிக்கையின் தகவலின்படி இந்தியாவின் டாப் 10 பணக்காரர்களுக்கு ஒருமுறை 5% வரி விதித்தால் அதைக் கொண்டு நாட்டின் ஒட்டுமொத்த குழந்தைகளுக்கும் பள்ளிக் கல்வி வழங்கிவிடலாம் என்று தெரிகிறது. 2017 முதல் 2021 வரை கவுதம் அதானிக்கு மட்டும் இதுபோன்ற ஒருமுறை பிரத்யேக வரி விதித்திருந்தால் அதன் மூலம் 1.79 லட்சம் கோடி ரூபாய் கிடைத்திருக்கும். அதைக் கொண்டு இந்தியாவில் உள்ள 50 லட்சம் ஆரம்பப் பள்ளிகளுக்கு ஓராண்டுக்கு ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கி நியமித்திருக்கலாம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6rXJVce
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now