
புதுடெல்லி: 2022 டிசம்பரில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,49,507 கோடி. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.26,711 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.33,357 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.78,434 கோடி (இறக்குமதி சரக்குகள் மீதான வசூல் ரூ.40,263 கோடி உட்பட) செஸ் வரி வசூல் ரூ. 11,005 கோடி.
அரசு 36,669 கோடி ரூபாயை மத்திய ஜிஎஸ்டி-க்கும், 31,094 கோடி மாநில ஜிஎஸ்டி-க்கும் வழக்கமான தீர்வாக செலுத்தியுள்ளது. டிசம்பர் 2022 இல் வழக்கமான தீர்வுகளுக்குப் பிறகு மத்திய மற்றும் மாநிலங்களின் மொத்த வருவாய் முறையே ரூ 63,380 கோடி மற்றும் ரூ 64,451 கோடி ஆகும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Sb4nP0T
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக