offer for you

புதன், 1 பிப்ரவரி, 2023

பொருளாதார அறிக்கை 2022-23 முக்கிய அம்சங்கள்

# இந்தியப் பொருளாதாரம் எதிர்வரும் 2023-24 நிதியாண்டில் 6.5 சதவீதம் வளர்ச்சி காணும். நடப்பு நிதியாண்டில் ஜிடிபி 7 சதவீதமாக இருக்கும்.
# 2022-23 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் ஏப்ரல் - டிசம்பர் வரையில் 67 சதவீதம் செலவிடப்பட்டுள்ளது.
# தனியார் நுகர்வில் விறுவிறுப்பு, அதிக மூலதன செலவினம், நிறுவனங்கள் நிதி நிலையில் வலுப்பாடு, சிறிய வர்த்தகங்களுக்கான கடனளிப்பு அதிகரிப்பு, வேலைச்சூழலுக்கு பணியாளர்கள் மீண்டும் திரும்புவது உள்ளிட்டவை வளர்ச்சியை ஊக்குவிக்கும் முக்கிய காரணிகளாக இருக்கும்.
# இந்தியப் பொருளாதாரம் உலகளவில் வாங்கும் திறன் சமநிலையில் (பிபிபி) 3 -வது இடத்திலும், செலாவணி மாற்று விகிதத்தில் 5 -வது இடத்திலும் உள்ளது.
# கரோனா தாக்கத்திலிருந்து இந்தியா மிக வேகமாக மீண்டுள்ளது. உள்நாட்டு தேவை அதிகரிப்பு மற்றும் மூலதன முதலீடு ஆகியவை பொருளாதார வளர்ச்சிக்கு உந்துசக்தியாக இருக்கும்.
# நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் தாண்டி 6.8 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது.
# சரிந்து வரும் ரூபாய் மதிப்பை கட்டுப்படுத்துவது மிகப்பெரிய சவாலான பணியாக மாறியுள்ளது.
# சர்வதேச அளவில் பொருட்களின் விலை அதிகரித்து வருவதால் நடப்பு கணக்கு பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.


# நடப்பு கணக்கு பற்றாக்குறை மேலும் உயரும் நிலையில் அது ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.
# நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் ஏற்றுமதி வளர்ச்சி மிதமான அளவிலேயே உள்ளது.
# வறுமையை போக்குவதில் பிஎம் கிசான், கரீப் கல்யாண் யோஜனா திட்டங்கள் முக்கிய பங்கு வகித்துள்ளன.
# சமூக நலத் திட்டங்களுக்கான மத்திய மற்றும் மாநில அரசுகளின் செலவினம் 2015-16 நிதி ஆண்டில் ரூ.9.1லட்சம் கோடியாக இருந்த நிலையில் நடப்பு நிதி ஆண்டில் ரூ.21.3 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
# நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-நவம்பர் காலகட்டத்தில் மத்திய அரசின் மூலதன செவினம் 63.4 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
# அந்நிய முதலீடுகள் வெளியேறிய நிலையிலும், 2022-ல் பங்குச் சந்தை சாதகமான வருவாயை கொடுத்துள்ளது.
# யுபிஐ வாயிலான பணப் பரிவர்த்தனை மதிப்பின் அடிப்படையில் 121 சதவீதமும், எண்ணிக்கை அடிப்படையில் 115 சதவீதமும் (2019-2022 காலகட்டத்தில்) அதிகரித்துள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/CAiZ6kJ
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now