offer for you

செவ்வாய், 7 பிப்ரவரி, 2023

சென்செக்ஸ் 221 புள்ளிகள் சரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் செவ்வாய்க்கிழமை வர்த்தகம் சரிவுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 221 புள்ளிகள் (0.37 சதவீதம்) வீழ்ச்சிடைந்து 60,286 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 43 புள்ளிகள் (0.24 சதவீதம் ) வீழ்ச்சியடைந்து 17,722 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் வாரத்தின் இரண்டாவது நாள் வர்த்தகம் தட்டையாகவே தொடங்கின. காலை 09:23 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 69.44 புள்ளிகள் உயர்வடைந்து 60,576.34 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 25.50 புள்ளிகள் உயர்வடைந்து 17,790.10 ஆக இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/uyHETn2
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now