offer for you

திங்கள், 27 மார்ச், 2023

வங்கிக் கணக்குகளை 'மோசடி' என அறிவிக்கும் முன்பு கடன் பெற்றவர்களிடம் விசாரிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: வங்கிகள் ஒரு கணக்கை மோசடி கணக்கு என அறிவிப்பதற்கு முன்பு கடன்பெற்றவரிடம் விசாரணை செய்ய வேண்டும் என்றும், அத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படும்போது வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு தெலங்கானா உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, மத்திய அரசு செய்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஓய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இதனைத் தெரிவித்திருக்கிறது. அந்த அமர்வு தனது உத்தரவில், "ரிசர்வ் வங்கியின் மோசடி வழக்குகள் குறித்த வழிகாட்டுதல்களின்படி, ஒரு கணக்கை மோசடி கணக்கு என அறிவிப்பதற்கு முன்பு, கடன் வாங்கியவரிடம் விசாரணை நடத்த வேண்டும். ஏனெனில், மோசடி அறிவிப்பு கடன் வாங்கியவருக்கு பல சிவில் விளைவுகள் ஏற்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளது. மேலும் மோசடி என அறிவிக்கும்போது முறையான நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/487QRtn
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now