offer for you

புதன், 12 ஏப்ரல், 2023

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 54 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (புதன்கிழமை) வர்த்தகம் ஏற்ற இறக்கமின்றி தட்டையாகத் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 5 புள்ளிகள் சரிவடைந்து 60,152 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 9 புள்ளிகள் உயர்ந்து 17,732 ஆக இருந்தது.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து லாபத்தில் நிறைவடைந்த பங்குச்சந்தைகளில் புதன்கிழமை வர்த்தகம் லாபநஷ்டமின்றி தட்டையாக தொடங்கியது. காலை 10:21 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 54.33 புள்ளிகள் உயர்வடைந்து 60,212.05 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 27.60 புள்ளிகள் உயர்வடைந்து 17,749.90 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் கலவையான சூழல் காரணமாகவும், பணவீக்கம், இன்று வெளியாகவிருக்கும் மார்ச் காலாண்டு வருவாய் தரவுகளை எதிர்பார்த்து முதலீட்டாளர்கள் காத்திருப்பதால் இந்திய பங்குச்சந்தைகள் இன்று லாப நஷ்டமின்றி தட்டையாக பயணித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8zs5bMf
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now