offer for you

சனி, 15 ஏப்ரல், 2023

ஒரே ஆண்டில் இந்தியாவில் 7.3 லட்சம் மின்சார இருசக்கர வாகனங்கள் விற்பனை: முன்னணியில் ஓலா!

சென்னை: 2022 - 23 நிதியாண்டில் இந்தியாவில் சுமார் 7.3 லட்சம் மின்சார இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 11,52,021 மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் மின்சார பேருந்துகள், கார்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மின்சார வாகன உற்பத்தியாளர் சங்கம் உறுதி செய்துள்ளது.

மின்சார இருசக்கர வாகனத்தை பொறுத்தவரையில் மாதத்திற்கு சராசரியாக சுமார் 60,000 வாகனங்கள் இந்தியாவில் கடந்த நிதியாண்டில் வாங்கப்பட்டுள்ளதாக தகவல். மின்சார வாகனம் சார்ந்த விழிப்புணர்வு, மலிவான விலை மற்றும் அதற்கான அணுகலும் தான் வாகன விற்பனை அதிகரித்து உள்ளதற்கான காரணங்களாக சொல்லப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vbS87mJ
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now