
மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் புதன்கிழமை வர்த்தகம் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 161 புள்ளிகள் (0.26 சதவீதம்) சரிவடைந்து 61,193 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 57 புள்ளிகள் (0.32 சதவீதம்) சரிந்து 18,089 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை சரிவுடனேயே தொடங்கின. காலை 09:48 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 253.86 புள்ளிகள் சரிவடைந்து 61,100.85 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 82.45 புள்ளிகள் சரிந்து 18,065.20 ஆக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/GpEsAn0
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக