offer for you

திங்கள், 22 மே, 2023

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 249 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் இன்று (திங்கள்கிழமை) சரிவுடனேயே தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 123 புள்ளிகள் சரிவடைந்து 61,606 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 22 புள்ளிகள் சரிந்து 18,180 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கின. இருந்தபோதிலும் வர்த்த நேரத்தின்போது ஆரம்ப நேரத்து சரிவை சரி செய்து ஏற்றமடைந்தது. காலை 09:49 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 249.86 புள்ளிகள் உயர்வடைந்து 61,979.54 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 53.80 புள்ளிகள் உயர்ந்து 18,257.20 ஆக இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Q6mHkW8
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now