
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 6) சவரனுக்கு ரூ.664 குறைந்து, ரூ.45,536-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. அட்சய திருதியையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நகைக் கடைகளில் கடந்த மாதம் 22, 23 ஆகிய இரண்டு நாட்களாக தங்கம் விலை பவுனுக்கு ரூ.480 குறைந்து இருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கம் கண்டு வந்த தங்கம் புதன்கிழமை அதிரடியாக ரூ.728 உயர்ந்தது. தொடர்ந்து வியாழக்கிழமையும் சவரனுக்கு ரூ.352 அதிகரித்து, ரூ.46,000 என்ற புதிய உச்சத்தை எட்டியது. வெள்ளிக்கிழமை சவரன் ரூ.46,200க்கு விற்பனையானது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rRmzsNE
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக