
சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.728 அதிகரித்து ரூ.45,648-க்கு விற்பனையாகிறது. இதன் மூலம், தங்கம் விலை மீண்டும் ரூ.45 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.42,760-க்கு விற்பனையானது. 26-ம் தேதி ரூ.43,040 ஆக அதிகரித்தது.
பின்னர், இந்த ஆண்டு ஜன.27-ம் தேதி முதல் 31-ம்தேதி வரை ஒரு பவுன் ரூ.42,700 முதல் ரூ.42,800 வரை விற்பனையாகி வந்தது. குறிப்பாக, பிப்.2-ம் தேதி ஒரு பவுன் ரூ.44,040-க்கு புதிய உச்சத்தை எட்டி விற்பனையானது. பின்னர், கடந்த 5-ம் தேதி விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து, பவுன் ரூ.45,520-க்கு விற்பனையாகி மீண்டும் புதிய உச்சத்தை எட்டியது. பின்னர், 10-ம் தேதி பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.44,800-க்கு விற்பனையானது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Zyvc9kN
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக