
மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் வியாழக்கிழமை வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 284 புள்ளிகள் (0.45 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 63,238 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 850 புள்ளிகள் (0.45 சதவீதம்) வீழ்ந்து 18,771 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் இன்றைய சரிவுடன் தொடங்கி நிலையில்லாமல் சென்றது. காலை 10:03 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 50.16 புள்ளிகள் சரிவடைந்து 63,472.99 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 9.65 புள்ளிகள் சரிந்து 18,847.20 ஆக இருந்தது. இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை வீழ்ச்சியுடன் தொடங்கின. என்றாலும் வர்த்தம் முழுவதும் நிலையில்லாமல் பயணித்தது. உலகளாவிய சந்தைகளில் நிலவிய எதிர்மறை சூழல், நிதி, எண்ணெய், தகவல் தொழில்நுட்ப பங்குகளின் விற்பனை அழுத்தம போன்ற காரணங்களால் வீழ்ச்சியுடன் நிறைவடைந்து.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gckLerQ
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக