
புதுடெல்லி: இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் மே மாதத்தில், கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மைனஸ் 3.48 சதவீதம் (-3.48%) ஆக சரிந்துள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்: இந்தியாவில் மொத்த விலை பண வீக்கம் கடந்த மே மாதம் -3.48% ஆக இருந்தது. அதற்கு முந்தைய மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் -0.92% ஆக இருந்த நிலையில், அது கடந்த மே மாதம் -3.48% ஆக சரிந்துள்ளது. இது கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத சரிவாகும். தானியங்கள், கோதுமை, காய்கறிகள், உருளைக்கிழங்கு, பழங்கம், முட்டைகள், கறி, மீன், எண்ணெய்வித்துக்கள், கனிமங்கள், கச்சா எண்ணெய்கள், இயற்கை வாயு, இரும்பு ஆகியவற்றின் விலை சரிவே மொத்த விலை பணவீக்க சரிவுக்குக் காரணம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/cPYfjhQ
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக