
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 1) சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.43,520-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம், மே மாதம் 4-ம் தேதி ரூ.46,000 என்ற புதிய உச்சத்தை எட்டியது. அதனைத் தொடர்ந்து பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/oJVspix
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக