
மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் திங்கள்கிழமை மீண்டும் புதிய உச்சத்துடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 529 புள்ளிகள் (0.80 சதவீதம்) உயர்வடைந்து 66,589 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 146 புள்ளிகள் (0.75 சதவீதம்) உயர்ந்து 19,711 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் இந்த வாரத்தின் முதல் நாள் வர்த்தகம் தொடக்கத்தில் அதன் புதிய உச்சத்தை அடைந்திருந்தது. வர்த்தக நேரத்தின் போது ஏற்ற இறக்கமின்றி தட்டையாக மாறிய பங்குச்சந்தை தகவல் தொழில்நுட்ப பங்குகளின் வாங்குதல்களால் மீண்டும் புதிய உச்சத்தை எட்டியது. காலை 10:04 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 213.42 புள்ளிகள் உயர்வடைந்து 66,274.32 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 41.35 புள்ளிகள் உயர்ந்து 19,605.85 ஆக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0IwQ695
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக