offer for you

செவ்வாய், 25 ஜூலை, 2023

ஏற்ற இறக்கமின்றி நிறைவடைந்த பங்குச்சந்தை

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் செவ்வாய்க்கிழமை ஏற்ற இறக்கமின்ற தட்டையாக நிறைவடைந்தன. சென்செக்ஸ் 29 புள்ளிகள் (0.04 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 66,355 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 8 புள்ளிகள் (0.04 சதவீதம்) உயர்ந்து 19,680 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் சற்று ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 10:12 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 36.31 புள்ளிகள் உயர்வடைந்து 66,421.09 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 03.90 புள்ளிகள் உயர்ந்து 19,676.25 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் எதிர்மறையான சூழல், நுகர்வோர் பங்குகளின் சரிவு போன்ற காரணங்களால் நிலையில்லாமல் பயணித்த இந்திய பங்குச்சந்தைகளின் வர்த்தகம் ஏற்ற இறக்கமின்றி தட்டையாக நிறைவடைந்ததது. இன்றைய ஆரம்ப வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் 66,559 ஆக உயர்ந்தும், 66,178 ஆக குறைந்தும் காணப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZlBMWXb
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now