offer for you

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2023

சென்செக்ஸ் 480 புள்ளிகள் உயர்வு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் வெள்ளிக்கிழமை ஏற்றத்துடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 480 புள்ளிகள் (0.74 சதவீதம்) உயர்வடைந்து 65,721 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 135 புள்ளிகள் (0.70 சதவீதம்) உயர்ந்து 19,517 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் வாரத்தின் இறுதி நாள் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கின. வர்த்தக நேரத்தின்போது நிலையில்லாமல் பயணித்தது. காலை 09:38 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 195.62 புள்ளிகள் உயர்வடைந்து 65,436.30 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 99.20 புள்ளிகள் உயர்ந்து 19,480.85 ஆக இருந்தது.

அழுத்தத்தில் இருந்து மீண்ட உலகளாவிய சந்தைகளில் நிலவிய சாதகமான சூழல், தனியார் வங்கி மற்றும் தகவல் தொழில்நுட்ப பங்குகளின் வாங்குதல் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் இறுதி நாளை ஏற்றத்துடன் நிறைவு செய்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/BXQ8mDO
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now