
மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் வியாழக்கிழமையும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 542 புள்ளிகள் (0.82 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 65,240 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 144 புள்ளிகள் (0.74 சதவீதம்) வீழ்ந்து 19,381 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கின. வர்த்தக நேரத்தின் போது நிலையில்லாமல் பயணித்தது. காலை 10:14 மணி நிலவரப்படி, சென்செக் 136.65 புள்ளிகள் சரிவடைந்து 65,646.13 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 32.55 புள்ளிகள் சரிந்து 19,494.00 ஆக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FLkvgQx
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக