offer for you

புதன், 4 அக்டோபர், 2023

மின் கட்டண உயர்வுக்கு எதிராக அக்.16-ல் 20,000 பேர் உண்ணாவிரதம்: தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு

மதுரை: ‘‘மின் கட்டண உயர்வை திரும்பப்பெறக் கோரி அக்டோபர் 16-ம் தேதி சென்னையில் 20 ஆயிரம் பேர் பங்கேற்கும் உண்ணாவிரதம் போராட்டம் நடக்க உள்ளது’’ என்று தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இதன் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஜேம்ஸ், ஜெபால், செல்வராஜ், ராஜப்பா, கோபி பழனியப்பன், முத்துரத்தினம், ஸ்ரீகாந்த் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பினர் கடந்த மாதம் 25-ம் தேதி மதுரை உட்பட தமிழகமெங்கும் தொழிற்சாலைகளில் ஒரு நாள் உற்பத்தி நிறுத்தம், கதவடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/QOfxknX
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now