
புதுடெல்லி: விதிமுறைகளை மீறியதாக, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கு ரிசர்வ் வங்கி தடைவிதித்துள்ளது. இதன்படி, பிப்ரவரி 29-ம் தேதிக்குப் பிறகு அதன் பேமெண்ட்ஸ் வங்கி சேவையை தொடர முடியாது.
இந்நிலையில், தடையை விலக்குவது தொடர்பாக பேடிஎம் தலைமை செயல் அதிகாரி விஜய் சேகர் குப்தா நேற்றுமுன்தினம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். அப்போது,பேடிஎம் வங்கி மீதான தடை,ரிசர்வ் வங்கியின் கொள்கை சம்பந்தப்பட்டது. இதில் மத்திய அரசு செய்வதற்கு ஒன்றுமில்லை என்று நிர்மலா சீதாராமன் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/tbiLGVe
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக