offer for you

திங்கள், 11 மார்ச், 2024

எஸ்ஐபி திட்டத்துக்கு வரவேற்பு அதிகரிப்பு: பிப்ரவரியில் ரூ.19,186 கோடி முதலீடு செய்த பொதுமக்கள்

மும்பை: தற்போது மக்களிடையே எஸ்ஐபிஎன்று அழைக்கப்படும் சிஸ்டமெட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் பரவலான வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்தில், எஸ்ஐபி-யில் அதிகபட்ச முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் பிப்ரவரி மாதத்தில் ரூ.19,186 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தில் அது ரூ.18,838 கோடியாக இருந்தது. பிப்ரவரி மாத நிலவரப்படி, எஸ்ஐபி திட்டத்தின் கீழ் மொத்த முதலீடு ரூ.10.52 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ஜனவரியுடன் ஒப்பிடுகையில் இது 2.49 சதவீதம் அதிகம் ஆகும். ஜனவரியில் அது ரூ.10.26 லட்சம் கோடியாக இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/O1FmhKg
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now