offer for you

திங்கள், 25 மார்ச், 2024

எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் நடத்தும் ஏற்றுமதி ஸ்டார்ட்-அப் நிறுவனம் தொடங்குவது குறித்து ஏப்.6,7-ல் பயிற்சி

சென்னை: மத்திய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தின் சார்பில், ஏற்றுமதி ஸ்டார்ட்-அப் நிறுவனம் தொடங்குவது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னை, கிண்டியில் உள்ள மத்திய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தின் சார்பில், ஏற்றுமதி ஸ்டார்ட்-அப் நிறுவனம் தொடங்குவது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

வரும் ஏப்.6 மற்றும் 7-ம் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இப்பயிற்சி வகுப்பு நடைபெறும். ஏற்றுமதிக்கு வாய்ப்புள்ள பொருட்களை கண்டறிதல், உற்பத்தி செய்யப்படும் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு வாய்ப்புள்ள நாடுகள் எவை, இறக்குமதியாளர்களை எவ்வாறு கண்டறிவது, ஏற்றுமதி குறித்த தகவல்களை எவ்வாறு சேகரிப்பது, ஏற்றுமதியாளர்களுக்கு அரசாங்கம் வழங்கும் சலுகைகள், ஏற்றுமதி வர்த்தகத்தை எவ்வாறு தொடங்குவது மற்றும் பதிவு செய்வது குறித்த பல்வேறு விஷயங்கள் இப்பயிற்சி வகுப்பில் கற்றுத் தரப்படும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/UYANhg6
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now