offer for you

செவ்வாய், 16 ஏப்ரல், 2024

சீனாவை விட இந்தியாவில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் அதிக விருப்பம்: ப்ளூம்பெர்க் அறிக்கையில் தகவல்

புதுடெல்லி: ப்ளூம்பெர்க் தொகுத்துள்ள தரவுகளின்படி, இந்திய பங்குகள் இந்தாண்டு தொடக்கத்திலிருந்து மார்ச் வரையிலான காலத்தில் நிகர அளவில் 25 பில்லியன் டாலர் முதலீட்டை ஈர்த்துள்ளன. அதேசமயம், சீனாவில் மேற்கொள்ளப்பட்ட பங்கு முதலீடு 5.3 பில்லியன் டாலர் அளவுக்கே இருந்தது.

மக்கள் தொகை பெருக்கம் மற்றும் நடுத்தர மக்களின் செலவிடும் வருவாய் அதிகரிப்பு ஆகியவை பெருநிறுவனங்களின் அதிக லாபம் ஈட்டலுக்கு அச்சாரமாக விளங்கும் என்ற நம்பிக்கையின் காரணமாகவே முதலீட்டாளர்களின் கவனம் இந்திய பங்குச்சந்தைகளின் பக்கம் திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/CoFUGlO
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now