offer for you

வெள்ளி, 10 மே, 2024

அட்சய திருதியை 2024: சென்னையில் தங்கம் விலை உயர்வு

சென்னை: அட்சய திருதியை ஒட்டி சென்னையில் இன்று (10.5.2024) ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பரவலாக காலை 7 மணி முதலே நகைக்கடைகள் பல வாடிக்கையாளர்களின் வருகையை எதிர்பார்த்து திறக்கப்பட்டன.

வழக்கமாக காலை 9 மணி முதல் 10 மணிக்குள் தங்கம் விலை தொடர்பான அறிவிப்பை தங்க வணிகர்கள் கூட்டமைப்பு வெளியிடும். ஆனால் அட்சய திருதியை என்பதால் இன்று காலை 7 மணியளவிலேயே தங்கம் விலை நிலவரம் வெளியானது. அப்போது 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.6660 ஆக இருந்தது. பவுனுக்கு ரூ.53,280க்கு விற்பனையானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/A2HfKbj
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now