offer for you

செவ்வாய், 9 ஜூலை, 2024

பணவீக்கத்தால் இந்திய வீடுகளில் சாம்பார் வைக்க ஆகும் செலவு உயர்வு: CRISIL தகவல்

பெங்களூரு: பணவீக்கம் காரணமாக இந்த ஆண்டு இந்திய வீடுகளில் உணவு சமைக்க ஆகும் செலவு சுமார் 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக கிரிஸில் சந்தை ஆய்வு நிறுவனம் (Crisil Market Intelligence and Analytics) தெரிவித்துள்ளது. இதற்கு காய்கறிகளின் விலை உயர்வு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தக்காளி, வெங்காயம், பூண்டு, பீன்ஸ் போன்ற காய்கறிகளின் விலை உயர்ந்த காரணத்தால் பெரும்பாலான நடுத்தர வருமானம் ஈட்டும் குடும்பங்களில் காய்கறிகள் வாங்கும் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் காரணமாக காய்கறிகள் கொண்டு தயாரிக்கப்படும் சாம்பார் போன்ற உணவுகளை சமைப்பது இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு காய்கறிகள் இல்லாத உணவுகளை வீட்டில் சமைப்பது அதிகரித்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FVXcj3P
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now