
சென்னை: ஆவினில் மூலிகைகள் சேர்ந்த பால், சுக்குமல்லி காப்பி, அஸ்வகந்தா பால் ஆகிய 3 புதிய பொருட்களை அறிமுகப்படுத்த ஆய்வுநடைபெறுகிறது என்று ஆவின்அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும் பணியில் தமிழ்நாடு கூட்டுறவுபால் உற்பத்தியாளர் இணையம் (ஆவின்) ஈடுபட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் வாயிலாக, தற்போது தினசரி 35 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த பால் கொழுப்புசத்து அடிப்படையில், பிரிக்கப்பட்டு ஆரஞ்சு, பச்சை, ஊதா,நீல நிற உறைகளில் (பாக்கெட்டுகளில்) அடைத்து விற்கப்படுகின்றன. இதுதவிர வெண்ணெய், நெய்,தயிர், மோர் உட்பட 200-க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் தமிழகம்முழுவதும் உள்ள 27 ஒன்றியங்கள் வாயிலாக தயாரித்து, ஆவின்பாலகங்கள், சில்லறை விற்பனையாளர்கள் மூலமாக விற்பனை செய்யப்படுகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/CPX9d4e
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக