offer for you

வெள்ளி, 27 செப்டம்பர், 2024

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு: பெட்ரோல் விலை ரூ.3 வரை குறைய வாய்ப்பு

புதுடெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்துள்ளதையடுத்து பெட்ரோல், டீசல் விலை 2 முதல் 3 ரூபாய் வரை குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக இக்ரா தரக் குறியீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இக்ரா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடைசியாக பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2 குறைக்கப்பட்ட போது கடந்த மார்ச் மாதத்தில் சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 83 முதல் 84 டாலராக இருந்தது. இந்த நிலையில், நடப்பு செப்டம்பரில் கச்சா எண்ணெய் இறக்குமதி விலை சராசரியாக பேரலுக்கு 74 டாலராக குறைந்துள்ளது.

இதனால், இந்தியன் ஆயில் போன்ற எண்ணெய் விநியோக நிறுவனங்களின் மோட்டார் வாகன எரிபொருள் சில்லறை விற்பனையின் லாப வரம்பு வெகுவாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, கச்சா எண்ணெய் விலை மாற்றமின்றி நிலையாக இருக்கும்பட்சத்தில் பெட்ரோல், டீசலின் சில்லறை விற்பனை விலை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை குறைக்கப்பட வாய்ப்புள்ளது என இக்ரா நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் கிரிஷ்குமார் கதம் தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/98H7uKp
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now