
சென்னை: சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த மார்ச் 28-ம் தேதி ஒரு பவுன் ரூ.50 ஆயிரம் என்ற வரலாறு காணாத உயர்வை எட்டியது.
இதைத் தொடர்ந்து விலை உயர்ந்து வந்த நிலையில், கடந்தஜூலை மாதம் 23-ம் தேதி தாக்கல்செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால் அன்றைய தினம் காலை பவுன் ரூ.54,480 எனநிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், பிற்பகலில் விறுவிறுவென ரூ.52,400-க்கு குறைந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/CQgLvzP
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக