offer for you

வியாழன், 24 அக்டோபர், 2024

தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை சற்றே குறைந்தது: இன்றைய நிலவரம்

சென்னை: கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இன்று (அக்.24) சற்றே குறைந்தது. சென்னையில் இன்று (வியாழக்கிழமை) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.440 குறைந்து ஒரு பவுன் ரூ.58,280-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் சற்றே குறைந்து கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.110-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த ஜுலை மாதம் மத்திய அரசின் பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைத்தது. இதன் காரணமாக, அன்று ஒரே நாளில் மட்டும் தங்கம் பவுனுக்கு ரூ.2,200 வரை குறைந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xPcGpwH
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now