offer for you

வியாழன், 12 டிசம்பர், 2024

இந்திய தொழில்முனைவோருக்கு பயிற்சி - ஜன.5-க்குள் விண்ணப்பிக்க அமெரிக்க தூதரகம் அழைப்பு

சென்னை: புதுடெல்லியில் உள்ள அமெரிக்கன் சென்டரில் ஃபிப்ரவரி 2, 2025-ல் நடத்தப்படும் பிரதான பிசினஸ் இன்குபேட்டரான நெக்சஸ் திட்டத்தில் இணைந்து பயிற்சி பெற ஜனவரி 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு இந்திய தொழில்முனைவோர்களை புதுடெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

நெக்சஸ் கோஹார்ட் திட்டம், 15 இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு, அவர்களது மதிப்பீட்டு முன்மொழிவுகளை மேம்படுத்தவும், அவர்களது இலக்கு சந்தைகளை வரையறுக்கவும், தயாரிப்பு அல்லது தொழில்நுட்பம் குறித்த சந்தைப் பின்னூட்டங்களைப் பெறவும், தங்கள் நிறுவனங்களை சந்தைக்குக் கொண்டு வருவதற்கான மைல்கற்களை உருவாக்கவும் இந்திய மற்றும் அமெரிக்க நிபுணர்களிடம் இருந்து சிறப்புப் பயிற்சியைப் பெறுவதற்கான விலைமதிப்பற்ற வாய்ப்பை வழங்குகிறது. இந்த நவீன கூட்டமைப்பில் தொடக்க முயற்சிகளில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் மற்றும் தொழில்முனைவோரிடையே மனம் சார்ந்த ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்தும் ஆராயப்படும்.

தொடக்கத்திலுள்ள ஒன்பது வார பயிற்சித் திட்டத்தைத் தொடர்ந்து நான்கு நிறுவனங்கள் வரை மேலும் ஆழமான துணையாதாரம் வழங்குவதற்காக நெக்சஸ்-இல் நீடிக்க வாய்ப்பளிக்கப்படும். இந்நிறுவனங்களுக்கு மேலும் எட்டு மாதங்கள் வரை இன்குபேட்டர் மற்றும் நெட்வொர்க் வசதிகள் வழங்கப்படும். இச்சமயத்தில், நெக்சஸ் நிபுணர்கள் குழு அவர்களுடன் இணைந்து பணியாற்றி அவர்களது தயாரிப்புகளை சந்தைக்குக் கொண்டு வரவும், வாடிக்கையாளர் மற்றும் வருவாய்த் தளங்களை வளர்க்கவும், பொருத்தமாக அமையும் பட்சத்தில், அவர்களது செயல்பாடுகளை விஸ்தரிப்பதற்கான நிதியைப் பெறவும் உதவுவதன் மூலம் அந்நிறுவனங்களை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வார்கள்.

இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள தொழில்முனைவோர் விண்ணப்பங்களை www.startupnexus.in இணையதளத்தில் ஜனவரி 5, 2025-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பாளர்களுக்கு ஜனவரி 17, 2025-க்குள் தெரிவிக்கப்படும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2se5S7o
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now