offer for you

செவ்வாய், 18 பிப்ரவரி, 2025

2 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.63,520-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், நேற்று விலை அதிகரித்தது. இதன்படி, தங்கம் கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ரூ.7,940-க்கும், பவுனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.63,520-க்கும் விற்பனையாகி வருகிறது.

இதேபோல், 24 காரட் சுத்த தங்கம் ஒரு கிராம் ரூ.69,288-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கடந்த 10 நாட்களாக அதிகரித்து வந்தது. கடந்த 11-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.64,480 ஆக அதிகரித்து புதிய உச்சத்தை அடைந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pyx4tZO
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now