
சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.360 குறைந்து ரூ.64,200-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று குறைந்தது. இதன்படி, தங்கம் கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.8,025-க்கும், பவுனுக்கு ரூ.360 குறைந்து ரூ.64,200-க்கும் விற்பனையாகி வருகிறது.
இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை ரூ.70,032-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.109-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.1 லட்சத்து 9 ஆயிரமாக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/J20c6jw
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக