offer for you

புதன், 12 மார்ச், 2025

‘2023-24 நிதியாண்டில் 3.14 கோடி கணக்குகளுடன் தமிழ்நாடு அஞ்சல் வட்டம் முன்னிலை’

சென்னை: “2023-24-ம் நிதியாண்டில் தமிழ்நாடு அஞ்சல் வட்டம், 33.89 லட்சம் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்குகள் உட்பட 3.14 கோடி கணக்குகளுடன் நாட்டில் முன்னிலையில் உள்ளது” என்று, தமிழ்நாடு வட்ட தலைமை அஞ்சல்துறை தலைவர் மரியம்மா தாமஸ் கூறியுள்ளார்.

தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் 2023-24 ம் நிதியாண்டில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா, சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு வட்ட தலைமை அஞ்சல்துறை தலைவர் மரியம்மா தாமஸ் தலைமை விருந்தினராக கலந்துக் கொண்டு விருதுகளை வழங்கினார். அஞ்சலக சேமிப்பு வங்கி, விரைவு அஞ்சல் (ஸ்பீடு போஸ்ட்), பார்சல் சேவைகள், சர்வதேச அஞ்சல்கள், அஞ்சலக ஆயுள் காப்பீடு, ஊரக அஞ்சலக ஆயுள் காப்பீடு, பிரதமரின் மக்கள் நலத் திட்டங்கள், ஆதார் பரிவர்த்தனைகள், அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்கள் ஆகியவற்றில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் 126 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZdqH0bQ
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now