offer for you

வெள்ளி, 14 மார்ச், 2025

தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்: ஒரு பவுன் ரூ.65,000-ஐ நெருங்கியது

சென்னை: சென்னையில் தங்கம் விலை நேற்று புதிய உச்சத்தை பதிவு செய்தது. பவுனுக்கு ரூ.440 உயர்ந்து, ரூ.64,960-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்த ஆண்டில் ஜனவரி 29-ம் தேதி முதல் தங்கம் விலை உயரத் தொடங்கியது. ஜனவரி 31-ம் தேதி ஒரு பவுன் ஆபரண தங்கம் ரூ.61,000-ஐயும், பிப்ரவரி 1-ம் தேதி ரூ.62,000-ஐயும் தாண்டியது. பிப்ரவரி 11-ம் தேதி ரூ.64,480 என்றும், 20-ம் தேதி ரூ.64,560 என்றும் அதிகரித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WueMHSa
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now