offer for you

வெள்ளி, 28 மார்ச், 2025

தங்கம் விலை புதிய உச்சம்: பவுன் ரூ.67 ஆயிரத்தை நெருங்குகிறது

சென்னை: தங்கம் விலை இன்று (மார்ச் 28) புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.66,720-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், கடந்த 20-ம் தேதி ஒரு பவுன் ரூ.66, 480 என்ற புதிய உச்சத்தை தொட்டது. மறுநாள் 21-ம் தேதி பவுனுக்கு ரூ.320-ம், 22-ம் தேதி ரூ.320-ம், 24-ம் தேதி ரூ.120-ம் குறைந்து விற்பனையானது. இந்நிலையில், 25-ம் தேதி ஒரு பவுனுக்கு ரூ.240 குறைந்தது. இதன்மூலம், 5 நாட்களில் பவுனுக்கு ரூ.1,000 குறைந்தது. இதனால் தங்கம் வாங்கும் நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் இது ஆறுதலை தந்தது. ஆனால் விலை குறைவு நீடிக்கவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mZwHOVT
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now