offer for you

புதன், 16 ஏப்ரல், 2025

தங்கம் விலை பவுனுக்கு ரூ.760 உயர்வு: மீண்டும் புதிய உச்சம்

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.760 அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி சென்னையில் இன்று (புதன்கிழமை) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.95 அதிகரித்து ஒரு கிராம் ரூ.8515-க்கும், பவுனுக்கு ரூ.760 அதிகரித்து ஒரு பவுன் ரூ.70,520-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.110-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,10,000-க்கும் விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த 12-ம் தேதி ஒரு பவுன் ரூ.70,160 ஆக உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டது. தங்கம் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/iF8Ybhm
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now