
சென்னை: அட்சய திருதியை தினமான இன்று (ஏப்.30) சென்னையில் தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.8,980 ஆகவும், பவுன் ரூ.71,840 ஆகவும் விற்பனையாகி வருகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.111-க்கு விற்பனையாகிறது.
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு அட்சய திருதியை திதி நேற்று இரவு 8.40 மணிக்குத் தொடங்கி, இன்று (30-ம்) மாலை 6.45 மணிவரை நீடிக்கிறது. இதையடுத்து, நகை வியாபாரிகள் இன்று காலையிலேயே அட்சய திருதியை சிறப்பு விற்பனையைத் தொடங்கினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4IyPtmh
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக