
சென்னை: சென்னையில் இன்று (மே 15) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.195 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,610-க்கும், பவுனுக்கு ரூ.1,560 குறைந்து, ஒரு பவுன் ரூ.68,660-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நீண்ட காலத்துக்குப் பின்னர் பவுன் ரூ.70,000-க்கும் கீழ் குறைந்துள்ளது. இது நகை வாங்குவோர் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த ஏப்.22-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.74,320 ஆக உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டது. அதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/R8nrFI2
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக