
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. சென்னையில் இன்று (திங்கள்கிழமை) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ15 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,915க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பின், கடந்த சில மாதங்களாக தங்கம் விலை உயரத் தொடங்கியது. கடந்த ஜூன் 14-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.74,560 என்றளவில் வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது. இந்த சூழலில் கடந்த 23-ம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/X4uqJ9M
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக