offer for you

திங்கள், 2 ஜூன், 2025

கடந்த ஆண்டு மே மாதத்தை விட 16.4% அதி​கமாக ரூ.2 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல்

புதுடெல்லி: கடந்த மே மாதத்தில் ரூ.2.01 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டு இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் சார்பில் 17 வகையான வரிகள், 13 வகையான செஸ் வரிகள் விதிக்கப்பட்டு வந்தன. இதற்கு பதிலாக கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி ஜிஎஸ்டி வரி அமல் செய்யப்பட்டது. கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ.2.1 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டது. மே மாதம் ரூ.1.73 லட்சம் கோடி, ஜூன் மாதம் ரூ.1.74 லட்சம் கோடி, ஜூலையில் ரூ.1.82 லட்சம் கோடி, ஆகஸ்டில் ரூ.1.75 லட்சம் கோடி, செப்டம்பரில் ரூ.1.73 லட்சம் கோடி, அக்டோபரில் ரூ.1.87 லட்சம் கோடி, நவம்பரில் ரூ.1.77 லட்சம் கோடி, டிசம்பரில் ரூ.1.77 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hnvqtTH
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now