
சென்னை: மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட, தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் வேளாண்மை சாராத வேலைவாய்ப்புகள், நீடித்த வளர்ச்சி இலக்குகள் 2030 - தமிழ்நாட்டின் தொலைநோக்கு ஆவணம் உள்ளிட்ட 4 அறிக்கைகள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இன்று (ஜூன் 9) தலைமைச் செயலகத்தில், துணை முதல்வர் மற்றும் மாநில திட்டக் குழுவின் அலுவல் சார் துணைத் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட தமிழ்நாட்டில் ஊரகப்பகுதிகளில் வேளாண்மை சாராத வேலைவாய்ப்புகள், நீடித்த வளர்ச்சி இலக்குகள் 2030 - தமிழ்நாட்டின் தொலைநோக்கு ஆவணம், தமிழ்நாட்டில் ஆட்டோமோட்டிவ் (வாகன உற்பத்தி) துறையின் எதிர்காலம், அறிவுசார் பொருளாதாரத்தை நோக்கி - தமிழ்நாட்டை வடிவமைக்கும் பாதை ஆகிய நான்கு அறிக்கைகளை சமர்ப்பித்தார். அந்த அறிக்கைகளின் முக்கிய அம்சங்கள்:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/YWdtONR
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக