offer for you

புதன், 18 ஜூன், 2025

ட்ரம்பின் தடையை தகர்த்து அதிகரித்து வரும் இந்திய ஐபோன் ஏற்றுமதி

சென்னை: இந்​தி​யா​வில் தயாரிப்​பு​களை மேற்​கொள்​ளக்​கூ​டாது என அமெரிக்க அதிபர் டொ​னால்டு ட்ரம்ப் ஆப்​பிள் நிறு​வனத்தை கண்​டிப்​புடன் அறி​வுறுத்​திய நிலை​யிலும் இந்​தி​யா​வின் ஐபோன் ஏற்​றுமதி தொடர்ந்து அதி​கரித்து வரு​கிறது. ஆப்​பிள் நிறு​வனத்​தின் ஒப்​பந்த தயாரிப்​பாளர்​கள் இந்​தி​யா​வில் உற்​பத்தி செய்து ஏற்​றுமதி செய்த ஐபோன்​களின் எண்​ணிக்கை 2.04 கோடியை கடந்​துள்​ளது. இது, 2025 ஜனவரி முதல் மே வரையி​லான 5 மாத நில​வரம் மட்​டுமே.

கடந்த 2024-ம் ஆண்டு இதே காலத்​துடன் ஒப்​பிடும்​போது இந்த ஐந்து மாதத்​தில் ஐபோன் ஏற்​றுமதி என்​பது 57% அதி​கம் என சர்​வ​தேச ஆராய்ச்சி நிறு​வன​மான கேனலிஸ் (ஓம்​டி​யா) புள்​ளி​விவரத்​தில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XG7CyN8
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now