
சென்னை: ரிசர்வ் வங்கி அறிவித்த ரெப்போ விகித மாற்றத்தை தொடர்ந்து, சுந்தரம் பைனான்ஸ் நிறுவனம் வைப்புத் தொகை வட்டி விகிதங்களை மாற்றி அமைத்துள்ளது. இதன்படி, மூத்த குடிமக்களுக்கான வைப்பு தொகைக்கு, 12 மாதங்களுக்கு 7.2%, 24 மற்றும் 36 மாதங்களுக்கு 7.5% வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோல பிற வாடிக்கையாளர்களுக்கான வைப்புத் தொகைக்கு, 12 மாதங்களுக்கு 6.7%, 24 மற்றும் 36 மாதங்களுக்கு 7% வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுந்தரம் பைனான்ஸ் நிறுவனம், டிஜிட்டல் வைப்புத் தொகை வசதியை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இது, சேமிப்பை இதுவரை இல்லாத வகையில் எளிதாகவும், பாதுகாப்பாகவும், எளிமையாக அணுகக்கூடியதாகவும் மாற்றியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/VJBQ3FZ
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக