
திருச்சி: மாம்பழ வரத்து அதிகரித்துள்ளதால் திருச்சியில் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. தமிழகத்தில் மாம்பழ சீசன் தொடங்கி ஒரு மாதத்துக்கு மேல் ஆகிறது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி இல்லாதது, வரத்து அதிகரிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் மாம்பழ விலை தற்போது வெகுவாக சரிந்துள்ளது. திருச்சியை பொருத்தவரை துவரங்குறிச்சி, நத்தம், திண்டுக்கல், மணப்பாறை, நாமக்கல், சேலம் ஆகிய பகுதிகளிலிருந்து அதிகளவு மாம்பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. ரங்கம் பகுதியிலிருந்து குறிப்பிட்ட அளவு மாம்பழங்கள் வருகின்றன.
திருச்சி காந்தி மார்க்கெட்டில் 50-க்கும் அதிகமான மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை பழக்கடைகள் உள்ளன. ஒரு மாதத்துக்கு முன் சில்லறை வியாபாரத்தில் ஒரு கிலோ ரூ.100-க்கு விற்ற பங்கனப்பள்ளி தற்போது 2 கிலோ ரூ.100-க்கு விற்பனையாகிறது. தற்போது மொத்த விலையில் பங்கனப்பள்ளி, ருமேனியா, நீலம் போன்றவை ஒரு கிலோ ரூ.20-க்கும், செந்தூரம், கல்லாமணி, பெங்களூரா ஆகியவை ரூ.15-க்கும், இமாம்பசந்த் ரூ.60- ரூ.80, மல்கோவா ரூ.80, அல்போன்ஸா ரூ.30- ரூ.50, நாட்டுப்பழங்கள் ரூ.10 முதல் ரூ.15 வரையும் விற்பனை செய்யப்படுகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/UR62YJV
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக