
புதுடெல்லி: அமெரிக்காவின் அழுத்தத்தை மீறி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா தொடர்ந்து வாங்கி வருகிறது. 4 சரக்கு கப்பல்களில் ரஷ்ய கச்சா எண்ணெய் குஜராத் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரஷ்யா, உக்ரைன் இடையே மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது.
இந்த போர் காரணமாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்வதை ஐரோப்பிய நாடுகள் முழுமையாக நிறுத்திவிட்டன. இதைத் தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து மிகக் குறைந்த விலையில் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. தற்போது இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 40 சதவீதத்தை ரஷ்யா பூர்த்தி செய்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/L9CXmsR
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக