offer for you

வெள்ளி, 12 செப்டம்பர், 2025

நாட்டிலேயே முதல் முறையாக 150சிசி ஹைப்பர் ஸ்போர்ட் ஸ்கூட்டர்: டிவிஎஸ் நிறுவனம் அறிமுகம்

சென்னை: ​நாட்​டிலேயே முதல் முறை​யாக 150சிசி ஹைப்​பர் ஸ்போர்ட் ஸ்கூட்​டரை டிவிஎஸ் மோட்​டார் நிறு​வனம் அறி​முகம் செய்துள்​ளது. இரண்டு மற்​றும் மூன்று சக்கர வாக​னப் பிரி​வில் உலக அளவில் முன்​னணி​யில் உள்ள டிவிஎஸ் மோட்​டார் நிறு​வனம், தனது என்​டார்க் பிராண்​டின் கீழ் மிக வேக​மான ஹைப்​பர் ஸ்போர்ட் ஸ்கூட்​டரை சென்​னை​யில் நேற்று அறி​முகம் செய்​தது. 150 சிசி இன்​ஜின் திறன் கொண்ட நாட்​டின் முதல் ஸ்கூட்​டர் என்ற பெருமை இதற்கு கிடைத்​துள்​ளது.

புதிய தலை​முறையைச் சேர்ந்த இருசக்கர வாகன பிரியர்​களை திருப்​திபடுத்​தும் வகை​யில், அபார​மான செயல்​திறன், கம்​பீர​மான ஸ்போர்ட்டி தோற்​றம் மற்​றும் அதநவீன தொழில்​நுட்​பத்​துடன் இந்த ஸ்கூட்​டர் தயாரிக்​கப்​பட்​டுள்​ளது. 6.3 வினாடிகளில் 0-விலிருந்து 60 கி.மீ. வேகத்தை எட்​டும் திறன் கொண்​டது. அதி​கபட்​ச​மாக மணிக்கு 104 கி.மீ. வேகத்​தில் செல்​லும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qw8kpPl
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now